அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டது : லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

மதுரை : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவிக்கப்பட்டது. இதனை லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொதுத்துறை  சீலிட்ட கவரில் அறிக்கையாக தாக்கல் செய்தன. அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த 2011 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக ராஜேந்திர பாலாஜி சொத்து சேர்த்ததாக மனுதாரர் குற்றம் சாட்டியிருந்தார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட கோரியிருந்தார். இந்த மனுவின் விசாரணையின் போது, மனுதாரர் புகாரில் முகாந்திரம் இல்லை என்பதால் விசாரணை கைவிடப்பட்டது என்று லஞ்சஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்தது/ இதையடுத்து ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய தமிழக பொதுத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: