உளுந்தூர்பேட்டையில் கோயில் குளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட மாணவர்கள்

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை ஸ்ரீகைலாசநாதர் கோயில் குளம் போதிய பராமரிப்பு இன்றி கழிவுநீர் தேங்கியும், பிளாஸ்டிக்  குப்பைகளும் அதிக அளவு இருந்தது. இதனை கடந்த ஒரு மாத காலமாக சீரமைக்கும்  பணியில் பல்வேறு சமூக அமைப்புகள் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில்  உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயிலும் நாட்டு  நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் குளத்தில் உள்ள தேங்கிய குப்பைகள்  மற்றும் முள்செடிகள், மண் குவியல்களை அகற்றும் பணிகள்  நடைபெற்றது. சமூக ஆர்வலர்கள் வழக்கறிஞர் வேலன் மற்றும் ஜெயசங்கர் ஆகியோர்  முன்னிலையில் சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: