லண்டன்: வங்கதேச யு-19 அணியுடனான முத்தரப்பு பைனலில், இந்தியா யு-19 அணிக்கு 262 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.இங்கிலாந்தில் நடைபெற்று வந்த இந்த தொடரில் இந்தியா, வங்கதேசம், இங்கிலாந்து யு-19 அணிகள் லீக் சுற்றில் மோதின. புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த வங்கதேசம் யு-19 அணியும் (11 புள்ளி), இந்தியா யு-19 அணியும் நேற்று பைனலில் களமிறங்கின. ஹோவே கவுன்டி மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த வங்கதேச யு-19 அணி 50 ஓவரில் 261 ரன் குவித்து ஆல் அவுட்டானது.