வேலம்மாள் நெக்சஸ் குழுமம் சார்பில் கோவிட் ஷீல்டு இலவச தடுப்பூசி முகாம்

திருவள்ளூர்: முகப்பேர், வேலம்மாள் நிறைநிலை மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது . கொரோனாவின் இரண்டாவது அலை மிக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சூழலில்அனைவருக்கும் தடுப்பூசி என்ற தாரக மந்திரத்தை உறுதிமொழியாகக் கொண்டு செயல்பட்ட வேலம்மாள் நெக்ஸஸ் குழுமம் சென்னை கார்ப்பரேஷனுடன் இணைந்து கோவிட் 19 பரவுவதை அகற்றுவதற்கான நடவடிக்கையாக இந்த தடுப்பூசி முகாமை நடத்தியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் 45 க்கு மேற்பட்ட வயதினருக்கான பிரத்யேக கோவிட் தடுப்பூசி சமூக இடைவெளியைப் பின்பற்றி  தொடங்கியது. பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்குமான தடுப்பூசி முகாமாக இது அமைந்தது. சுகாதார அலுவலர்களின் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையுடன் கோவி ஷீல்டு தடுப்பூசி முகாம் அமைதியாக நடைபெற்றது. இம்முகாமில் சுகாதார அலுவலர் கோவிஷீல்டு தடுப்பூசியின் அவசியத்தையும் அதன் பயன்களையும் பற்றி விரிவாக விளக்கிக் கூறி மக்களிடையே இருந்த அச்சத்தைப் போக்கிப் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தினார். பள்ளித் தாளாளர் எம்விஎம்.வேல்மோகன்சுகாதார அலுவலர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார்….

The post வேலம்மாள் நெக்சஸ் குழுமம் சார்பில் கோவிட் ஷீல்டு இலவச தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: