ஹாலிவுட் கனவுக்கன்னி எலிசபெத் டெய்லர் பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கார்....ஆகஸ்ட் 6ம் தேதி ஏலம்

நியூயார்க்: ஹாலிவுட் கனவுக்கன்னி எலிசபெத் டெய்லர் பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கார் ஏலத்திற்கு வருகிறது. பச்சை வண்ணத்திலான இந்த கார் அக்காலத்தில் பச்சை தேவதை என வர்ணிக்கப்பட்டது. எத்தனையோ பச்சை வண்ண ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் தயாரிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் அத்தனையும் எலிசபெத் டெய்லர் கார் போன்று எதுவும் இல்லை. அதுவும் 20 ஆண்டுகள் ஆசையாய் எலிசபெத் பயன்படுத்திய கார் என்பதால் இந்த கார் மிகவும் சிறந்ததாக வர்ணிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 5 மடங்கிற்கும்மேல் விலைபோகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரின் ஏலத்துக்கான ஆரம்ப விலை இன்னும் நிர்ணயிக்கப்படாத நிலையில், அந்த ரக காரின் தற்போதைய விலையை காட்டிலும் 5 மடங்கு அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் ஏலம் வருகிற ஆகஸ்ட் 6ம் தேதி ,நியூயார்க் நகரில் உள்ள ‘பியர்ரி ஓட்டலில்’ நடக்கவுள்ளது. இந்த காரை ஏலத்தில் வாங்குவதற்காக பல்வேறு தலைவர்கள், ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.

Related Stories: