டெல்லி பாஜக-வின் முன்னாள் தலைவர் மங்கே ராம் கார்க் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: டெல்லி பா.ஜ.க.வின் முன்னாள் தலைவராக இருந்த மங்கே ராம் கார்க் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த 2003-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஒரே ஒரு முறை எம்.எல்.ஏ.வாக  கார்க் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சியில் பொருளாளர், மாவட்ட தலைவர் போன்ற பல பொறுப்புகளை வகித்துள்ள கார்க் கடந்த 1997ம் ஆண்டு அக்கட்சியின் டெல்லி மாநில தலைவரானார். இந்நிலையில், இன்று காலை 7.30 மணியளவில் அவர் காலமானார். அவருக்கு வயது 81. அவரது மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும் நிலையில், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: