சொல்லிட்டாங்க...

செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தில் தமிழுக்கு இடம் இல்லை என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாதது.

- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

ஆளுநர்கள் தங்களுடைய அதிகார வரம்பு என்ன என்பதை தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

கிராமப்புற மாணவர்களின் டாக்டர் கனவை சிதைத்திருக்கிற நீட் தேர்வுபோல மருத்துவ உயர் படிப்பு படித்து சாதிக்க நினைப்பவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வு தடையாக அமையும்.

- அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்

எம்பி தேர்தலின்போது பாஜவுக்கு ₹2000 கோடிக்கு நன்கொடை எப்படி வந்தது என பாஜ பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும்.

- பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி

Related Stories: