பயிற்சியாளர் விவகாரம் கோஹ்லி பேசக்கூடாதாம்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் உள்ளிட்ட அணி நிர்வாகத்தின் ஒப்பந்தக் காலம் உலககோப்பையுடன் முடிந்து விட்டது. இந்நிலையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளதால்  பயிற்சியாளர் உள்ளிட்ட அணி  நிர்வாகத்தின் பணிகாலத்தை மேலும் 45 நாட்களுக்கு நீடித்துள்ளது. இந்நிலையில் புதிய பயிற்சியாளரை   ‘இந்திய கிரிக்கெட்டின் அடையாளம்’ கபில்தேவ் தலைமையிலான குழு தேர்வு செய்யும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்நிலையில் யாரை பயிற்சியாளராக நியமிக்கலாம் என்று கேப்டன் விராத் கோஹ்லி ஏற்கனவே ஆலோனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பிசிசிஐ, ‘ யாரை பயிற்சியாளராக நியமிக்கலாம் என்பதை வரும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து குழு முடிவு செய்யும். எனவே பயிற்சியாளர் நியமனம் குறித்து கோஹ்லி ஏதும் பேச வேண்டாம்’ என்று பிசிசிஐ எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertising
Advertising

Related Stories: