மத்திய, மாநில அரசுகள் சிந்தித்து தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மதுவிலக்கு நடைமுறைப்படுத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகள் சிந்தித்து இந்தியாவை மது இல்லாத நாடாக மாற்ற தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தின் ஓர் அங்கமான தேசிய போதை மீட்பு சிகிச்சை மையத்தின் சார்பில், ‘‘இந்தியாவில் மது அருந்துவதால் ஏற்படும் சுகாதார மற்றும்  பொருளாதார பாதிப்புகள்’’ என்ற தலைப்பில் தேசிய அளவில் ஆய்வு நடத்தப்பட்டது. மது அருந்துவதால் மனிதர்களுக்கு தோன்றும் புற்றுநோய், கல்லீரல் நோய் மற்றும் சாலை விபத்துகள் காரணமாக அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், இந்த  வகையில் மட்டும் 2011 முதல் 2050 வரையிலான 40 ஆண்டுகளில் 25.80 கோடி ஆண்டுகள் மனித வாழ்நாள் பறிக்கப்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.31,500 கோடி மது விற்பனை மூலம் வருமானம் கிடைத்தாலும், அதையும் தாண்டி ஆண்டுக்கு ரூ.24.94 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. இப்போது எய்ம்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வுகளின் மூலம் இந்த தகவல்கள்  மறுஉறுதி செய்யப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டிய இளைஞர் சமுதாயம் மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறது. இதனால் வளர்ச்சிக்குத் தேவையான மனித வளம் கிடைக்காமல் அனைத்து துறைகளும் தடுமாறிக்  கொண்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் பார்க்காமல் மதுவிற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரிப்பதை மட்டும் கண்டு மகிழ்வது சரியல்ல. எனவே, தேசிய அளவில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து மத்திய, மாநில  அரசுகள் சிந்திக்க வேண்டும். இதுகுறித்து விவாதித்து. நல்ல முடிவை எடுத்து இந்தியாவை உலகின் மது இல்லாத முதல் நாடாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: