தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை : உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த அரசு முன்வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார். தமிழகத்தில் 3 வருடங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லை என்றும் மத்திய அரசின் நிதி கிடைப்பதிலும் சிக்கல் எழுந்துள்ளது என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். மேலும் மானிய  செயலாக்க மானியத்தை வழங்கவில்லை என்று மத்திய அமைச்சரும் கூறி இருந்ததை ஸ்டாலின் சுட்டிக் காட்டியுள்ளார். எனவே இனியாவது உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு முன் வரவேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். இதே கோரிக்கைகளை காங்கிரஸ் தரப்பும் முன்வைத்தது.  

இதற்கு பதிலளித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி, மத்திய அரசிடம் இருந்து பெறவேண்டிய ரூ. 12,312 கோடியில் ரூ.8,531 கோடி வாங்கி விட்டதாக தெரிவித்தார். மீதமுள்ள தொகையை பெற நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் பதில் அளித்தார். உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை வார்டு வரையறைகள் 21 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் வேலுமணி கூறினார். உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயாராக இருப்பதாகவும் அவர் பேரவையில் தெரிவித்தார். முன்னதாக இன்று காலை தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்.31 வரை காலஅவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: