இரவிலும் பிரேத பரிசோதனை: பேரவையில் அதிமுக வலியுறுத்தல்

சென்னை:  சட்டப் பேரவையில் நேற்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாத்தில் கலந்து கொண்டு வேடசந்தூர் பரமசிவன்(அதிமுக) பேசியதாவது:  அரசு பள்ளி மாணவர்களை மருத்துவர்களாக்கும் வகையில், 9ம் வகுப்பிலே அதற்கு ஏற்றவாறு படிக்கும் மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு என்று அரசு பள்ளிகளில் தனி குரூப் ஏற்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை செய்வது பகலில் மட்டுமே நடக்கிறது. 6 மணிக்கு மேல் அனுமதி கிடையாது. தற்போது எல்இடி உள்ளிட்ட நவீன லைட்டுகள் எல்லாம் வந்துவிட்டது. எனவே இரவிலும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

 அமைச்சர் விஜயபாஸ்கர்: இரவில் பிரேத பரிசோதனை செய்வதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளன. அவசரமான பிரேத பரிசோதனைகளுக்கு கலெக்டர் மூலம் சிறப்பு அனுமதி பெற்று பிரேத பரிசோதனை செய்ய அனுமதி உள்ளது.

அரசு பள்ளி மாணவர்களை மருத்துவ படிப்புக்கு தயார் செய்ய அரசு பள்ளிகளில் தனி குரூப் ஏற்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: