ட்வீட் கார்னர்... குருவுக்கு மரியாதை!

குரு பூர்ணிமா தினமான நேற்று இந்திய அணி முன்னாள் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், ட்விட்டர் பக்கத்தில் தனது பயிற்சியாளர் ராம்காந்த் அச்ரேக்கருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் காலமான அச்ரேக்கரை (87 வயது) நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சச்சின், ‘மாணவர்களிடம் உள்ள அறியாமை என்ற இருளை அகற்றும் சூரியன் தான் ஆசிரியர். என்னுடைய கிரிக்கெட் வாழ்வில் அத்தகைய குருவாகவும் வழிகாட்டியாகவும் இருந்த அச்ரேகர் சாருக்கு இந்த தினத்தில் நன்றியை காணிக்கையாக்குகிறேன்’ என்று தகவல் பதிந்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: