ஆப்கான், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் வெளியேறின அரையிறுதிக்குள் நுழைந்த முதல் அணி ஆஸ்திரேலியா!...அடுத்த இடத்தில் நியூசிலாந்து, இந்தியா; இங்கிலாந்து தேறுமா?

லண்டன்:  இங்கிலாந்து - வேல்ஸ் நகரங்களில் நடைபெற்று வரும் உலககோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக தகுதிப் பெற்றது ஆஸ்திரேலியா. நேற்று இங்கிலாந்துடனான லீக் போட்டியில் வெற்றிப் பெற்றது  மூலம் தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. இதனையடுத்து இந்த வாரம் பல முக்கியப் போட்டிகள் நடைபெறவுள்ளதால் உலக கோப்பை அரையிறுதியில் அடுத்தடுத்து இடம்பெறப் போகும் 3 அணிகள் எவை என தெரிந்தவிடும். நேற்று  நடந்த 32வது லீக் போட்டி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளை இடையே நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீசியது. இதனால் முதல் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் தொடக்க  ஆட்டக்காரரும் கேப்டனுமான ஆரோன் ஃபின்ச் சதம் அடித்தார். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி கிரிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து 2வது பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய அணி ஜாசன் பெரெண்ட்ராஃப் 5  விக்கெட்டுகளையும், மிட்ஜெல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். நேற்றைய போட்டியுடன் கணக்கிட்டால், ஆஸ்திரேலிய அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்த முதல் அணி என்ற பெருமையை  பெற்றது. இன்றைய நிலையில் கோப்பையை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ள அணிகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. இருந்தாலும், முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகளும் அரையிறுதிக்குள் நுழைய கடைசிகட்ட வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளன.

அதே நேரத்தில் 7 தோல்விகளுடன் ஆப்கானிஸ்தானும், 5 தோல்விகளுடன் தென்னாப்பிரிக்காவும், 4 தோல்விகளுடன் வெஸ்ட்இண்டீஸ் அணிகளும் உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேறுகின்றன.  சம்பிரதாயத்துக்காக மேலும் சில  ஆட்டங்களில் மேற்கண்ட அணிகள் சில ஆட்டங்களில் ஆட உள்ளன. ஆஸ்திரேலிய அணி இதுவரை நடந்த 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றிப் பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இன்னும் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா  ஆகிய அணிகளிடம் மட்டுமே லீக் சுற்றில் மோத வேண்டியுள்ளது. இருந்தும், லீக் சுற்றில் இருந்து வெளியேறும் ஆபத்து இல்லை. நியூசிலாந்து 6 ஆட்டங்களில் 5 வெற்றியுடன் 11 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்திய அணி 5 ஆட்டங்களில் 4  வெற்றியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 7 ஆட்டங்களில் 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகளுடன், 4வது இடத்தில் உள்ளது. வங்கதேசம் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 5வது இடத்திலும், இலங்கை தலா 2 வெற்றி,  தோல்வியுடன் 6வது இடத்திலும், பாகிஸ்தான் 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 7வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 1 வெற்றி, 4 தோல்விகளுடன் 8வது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 1 வெற்றியும், ஆப்கானிஸ்தான் வெற்றி எதுவும்  பெறவில்லை என்ற நிலையில் அணிகள் உள்ளன.

அதேபோல் 6 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள நியூசிலாந்து மற்றும் 5 போட்டிகளில் விளையாடி 9 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ள இந்தியா ஆகிய அணிகளும் அரையிறுதி விளையாட  ஏறக்குறைய தகுதிபெற்றுள்ளன.  இந்நிலையில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியடைந்துள்ள இங்கிலாந்து அரையிறுதி போட்டியில் விளையாட தகுதி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் அண்மையில் பெற்ற வெற்றிகளால் அரையிறுதி போட்டியில் விளையாட தகுதி பெறும் அணிகள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இதனால் வரும் 30ம் தேதியன்று இங்கிலாந்து  மற்றும் இந்தியா அணிகள் மோதவுள்ள போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: