லாராவுக்கு நெஞ்சுவலி மும்பையில் சிகிச்சை

வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னாள் நட்சத்திரம் பிரையன் லாரா (50 வயது), ஐபிஎல் டி20 மற்றும் உலக கோப்பை தொடர்களில் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இதற்காக கடந்த சில மாதங்களாக மும்பையில் தங்கியிருக்கும் அவருக்கு நேற்று காலையில் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ‘பயப்படும் அளவுக்கு பெரிய பாதிப்பு ஏதும் இல்லை. நலமாக உள்ளார்... விரைவில் ஓட்டலுக்கு திரும்புவார்’ என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: