ஆரல்வாய்மொழியில் 500 கிலோ மாம்பழம் அழிப்பு: உணவு பாதுகாப்பு அதிகாரி அதிரடி

ஆரல்வாய்மொழி: ஆரல்வாய்மொழியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தியதில் கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. ஆரல்வாய்மொழி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமான செங்கசூளைகள் உள்ளன. வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் இங்கு குடும்பத்துடன் தங்கி வேலை பார்க்கின்றனர். இவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஞாயிற்றுகிழமைகளில் மொத்தமாக வாங்கி வைத்து கொள்வது வழக்கம். இதற்காக ஞாயிற்றுகிழமைகளில் பழ வகைகள், இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் வெளியூர், உள்ளூர்களில் இருந்து வாகனங்களில் அதிக அளவில் பழங்கள் கொண்டு குவிக்கப்படுகிறது. இதில் சில வியாபாரிகள் அதிக லாபம் அடைவதற்காக பழ வகைகளை கல்லினை கொண்டும்,

ஸ்பிரே கொண்டும் பழுக்க வைத்து விற்பனை செய்வதாகவும்,  இதனை வாங்கி செல்கின்ற பொது மக்களுக்கு வயிற்று போக்கும், வாந்தியும் ஏற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அதிகாரி பிரவின் திடீர் என்று இன்று காலையில் ஆரல்வாய்மொழியில் உள்ள விற்பனை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இதில் உணவு பண்டங்கள் தரமற்ற முறைால் கவர் செய்யப்பட்டும், மேலும் மாம்பழங்கள் மற்றும் பிற பழ வகைகள் கல் மூலம் பழுக்க வைக்கப்படுவதும் தெரிய வந்தது. மேலும் அழுகிய பழ வகைகளையும் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவ்வாரான பழங்களை பறிமுதல் செய்தார். இது சுமார் 500 கிலோ இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் உணவு பொருட்களை தரமற்ற முறையில் விற்பனை செய்வதினையும் கண்டு பிடித்து அதனையும் பறிமுதல் செய்தார்.மேலும் மாமிச கடைகளுக்குள் ஆய்வு செய்து மாமிசங்களை தேவைக்கு தகுந்தார்போல் வெட்டி வைக்க வேண்டும் என்றும், மீதமுள்ளதினை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும் என எச்சரித்தார். ஆரல்வாய்மொழியில் திடீர் என்று உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்து தரமற்ற பழ வகைகளை பறிமுதல் செய்தது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்பகுதியில் அடிக்கடி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் .அவ்வாறு செய்தால் தரமான பொருட்கள் கிடைக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Stories: