ஜி 20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி : டிரம்ப் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கிறார்

புதுடெல்லி: ஜப்பானில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி ஜப்பான் செல்கிறார். அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி 20 நாடுகளின் உச்சிமாநாடு ஜப்பானின் ஒசாகா நகரில் வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் ஜி 20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க ஜி 20 நாடுகளின் பிரதமர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின் பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு முக்கிய உலக தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

Related Stories: