நெல்லையப்பர் கோயிலில் விநாயகர் திருவிழா கொடியேற்றம்: ஆனித்தேர் திருவிழா பணிகள் தொடங்கின

நெல்லை: நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயிலில் நடக்கும் முக்கிய திருவிழாவான ஆனித் தேரோட்ட திருவிழா வரும் ஜூலை 6ம்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி தேர்திருவிழா பணிகளை துவக்க வேண்டி நெல்லையப்பர் கோயிலில் விநாயகர் திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடந்தது. முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோயிலில் பந்தல் அமைத்தல், அழைப்பிதழ் அச்சிடுதல், தேர்களை  சுத்தப்படுத்தி அலங்கரித்தல் உள்ளிட்ட பணிகள்  மேற்ெகாள்ளப்படுகின்றன. இந்த பணிகள் தற்போது துவங்கின.

தொடர்ந்து ஆனித்தேரோட்ட திருவிழா ஜூலை 6ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜூலை 7ம் தேதி காலையில் சுவாமி, அம்பாள் வெள்ளி சப்பரத்தில் வீதி உலாவும், இரவு சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் வீதி உலாவும் நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் காலை, மாலையில் வீதி உலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 14ம் தேதி  காலை 8.30 மணிக்கு மேல் பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் ெசய்துவருகிறது.

Related Stories: