நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றினாலே தமிழகம் சோலைவனமாகிவிடும்: தமிழிசை அறிக்கை

சென்னை:   தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   தமிழகத்தில் தவிக்கும் மக்களுக்கு தண்ணீர் கொடுத்தாக வேண்டும். போர்க்கால  நடவடிக்கையில் தண்ணீர் வழங்குவது  குறித்து அனைத்து  கட்சிகளும்  ஒன்று கூடி, ஆலோசனை வழங்கி மக்களுக்கு தண்ணீர் கிடைக்க செய்ய வைக்க வேண்டும் என்ற  நிலை மாறி,  மக்களின் தாகத்தையும் தவிப்பையும் தனது அரசியல் பதவிகளுக்காக சில கட்சிகள்  பயன்படுத்துகின்றன.

  இன்று தண்ணீர் பஞ்சத்தைப்  பற்றி பேசுகிறார்கள். இது உடனே ஏற்பட்ட பிரச்னையா, தேசிய நதிகள் இணைப்பை நிறைவேற்றாவிட்டாலும் தென்னக நதிகளான மகாநதி- தாமிரபரணி இணைப்புக்காவது முயற்சி செய்திருந்தால் தமிழகம் பலன்  பெற்றிருக்கும். குஜராத் மாநிலத்தில் நர்மதா திட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், ஒரு பாலைவனமே சோலைவனமாகியது. அப்படி என்றால் நதிகள் இணைப்பு மற்றும் கிடப்பில் போடப்பட்டுள்ள கால்வாய் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலே  தமிழ்நாடு சோலைவனம் ஆகியிருக்கும். நாட்டு மக்களுக்கு வளர்ச்சியை தர  பாஜ கூட்டணியால்  மட்டுமே முடியும்.  அதன்படி உடனே முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் திட்டம் தான் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: