டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது: பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு

டெல்லி: டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. மக்களவைத் தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களுக்கு கடந்த 30ந் தேதி ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல் அமைச்சரவை கூட்டத்தில், முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்கி ஜூலை 26ம் தேதி வரை நடைபெறும் என்றும், ஜூன் 19ம் தேதி மக்களவைக்கான சபாநாயகரை தேர்ந்தெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், ஜூலை 4ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. மோடி அரசின் இரண்டாவது 5 ஆண்டுகளுக்கான முதல் பட்ஜெட் வரும் ஜூலை 5ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளதாகவும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜூலை 20ம் தேதி உரையாற்றுகிறார்.

17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர், வரும் ஜூன் 17ம் தொடங்கி ஜூலை 26ம் தேதி வரை 40 நாட்கள் நடக்கும். இந்த கூட்டத்தொடரில், 30 அமர்வுகள் நடக்கவுள்ளன. இதற்கிடையில் நாளை மக்களவையின் 17-வது கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். 17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்கி ஜூலை 26ம் தேதி வரை நடைபெறுகிறது. நாடாளுமன்ற இரு அவைகளையும் சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தருமாறு மத்திய அரசு கூட்டத்தில் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: