6 மாநிலங்களவை இடத்துக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

புதுடெல்லி: காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்களுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த பாஜவின் தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோர், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அமைச்சர்களாகி உள்ளனர். இதனால், குஜராத் மாநிலத்தில்  அவர்களின் மாநிலங்களவை எம்பி இடங்கள் காலியாகி உள்ளன. இதே போல, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் (பீகார்), சமந்தா (ஒடிசா) ஆகியோர் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றனர். மேலும் ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில்  மாநிலங்களவை எம்பியாக இருந்த பிரதாப் கேசரி தேப் வெற்றி பெற்றார். மற்றொரு எம்பி சவுமியா ரஞ்சன் பட்நாயக் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால், குஜராத்தில் 2, ஒடிசாவில் 3, பீகார் 1 என காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. அன்றைய தினமே வாக்குகள்  எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Related Stories: