இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா வர்த்தகப் போர் ?

டெல்லி : இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா வர்த்தகப் போர் தொடுக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இந்தியாவுக்கு எதிராக இப்போதைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் உருக்கு மற்றும் அலுமினியத்திற்கும் அமெரிக்கா வரிகளை விதித்தது. இதற்கு பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள், பாதம் பருப்பு, வால்நட், அக்ரூட் பருப்புகள் உள்ளிட்ட 29 பொருட்கள் மீதான வரி விதிப்பை அதிகரிக்க இந்தியா கடந்த ஆண்டு ஜூன்-ல் முடிவு செய்ததது.

ஆனால் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்ததால் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் 29 அமெரிக்க பொருட்கள் மீதான வரி உயர்வை நாளை முதல் அமல்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் வர்த்தகப் போர் மூண்டு, இரு நாடுகளும் மாறி மாறி வரி விதிப்பை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: