வல்லரசுவின் என்கவுன்டர் என்பது திட்டமிடப்பட்ட கொலை: வல்லரசுவின் தந்தை சாமிக்கண்ணு

சென்னை : வல்லரசுவின் என்கவுன்டர் என்பது திட்டமிடப்பட்ட கொலை என்று வல்லரசுவின் தந்தை சாமிக்கண்ணு தெரிவித்துள்ளார். வல்லரசு என்கவுன்டர் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன் என்று கூறிய அவர், வல்லரசு, கடந்த 2 ஆண்டுகளாக எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல் திருந்தி வாழ்ந்து வந்தார் என்றும் அவர் கூறினார். முன்னதாக சென்னை வியாசர்பாடியில் பல கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி வல்லரசு சுட்டு கொலை செய்யப்பட்டார். கைது செய்ய முயன்ற உதவி ஆய்வாளர்களை, வல்லரசு கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. எனினும் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி வல்லரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த 2 உதவி ஆய்வாளர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: