குஜராத்தில் நாளை ‘வாயு’ கரை கடக்கிறது

புதுடெல்லி:  அரபிக்கடலில் உருவான வாயு புயல் குஜராத்தில் நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘வாயு’ என பெயரிடப்பட்டு உள்ளது.  இந்த புயல் தீவிரமடைந்து, குஜராத்தில் நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வாயு புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும். வடக்கு நோக்கி நகர்ந்து போர்பந்தர்-மஹிமா இடையே 13ம் தேதி கரையை கடக்கும். இதனால், 13ம் தேதி காலை மணிக்கு 135 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும்,’ என்று கூறப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நேற்று காலை முதல் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: