மண்டல, மகர விளக்கு சீசனில் சபரிமலை வருமானம் 98.66 கோடி குறைந்தது

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மண்டல, மகர விளக்கு சீசனில் முந்ைதய சீசனை விட ரூ.98.66 கோடி வருமானம் குறைவாக கிடைத்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடந்த போராட்டங்களால் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் கோயிலுக்கு வருமானமும் குறைந்தது. இந்த நிலையில் கடந்த மண்டல, மகர விளக்கு சீசனில் சபரிமலை கோயிலுக்கு கிடைத்த வருமானம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கோயிலுக்கு கிடைத்த மொத்த வருமானம் ரூ.178 கோடியே 75 லட்சத்து 54 ஆயிரத்து 333 என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் முந்தைய வருடம் ரூ. 277 கோடியே 42 லட்சத்து 2 ஆயிரத்து 833 கிடைத்திருந்தது. முந்தையை வருடத்தை விட கடந்த வருடம் ரூ.98.66 கோடி குறைந்துள்ளது. வழக்கமாக ஒவ்வொரு வருடமும் கோயில் வருமானம் முந்தைய ஆண்டைவிட அதிகரிக்கும். ஆனால் கடந்த வருடம் முந்தைய வருடத்தை விட குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: