அ.தி.மு.க பொதுக்குழுவை விரைவில் கூட்ட நடவடிக்கை: பன்னீருக்காக து.பொ.செ. பதவி உருவாக்கப்படும் என தகவல்

சென்னை: ஆட்சி அதிகாரத்தை தனது கட்டுக்குள் வைத்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவியை பெற திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. அதிமுகவில் இரட்டைத் தலைமைக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் 21 மாதங்களுக்கு பிறகு பொதுக்குழுவை கூட்ட கட்சி தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2017 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த பொதுக்குழுவில் பொதுச்செயலாளருக்கான அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுத்தும் வகையில் கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியும் அப்பதவிகளில் இருந்து கொண்டு கட்சியை நிர்வகித்துக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விரைவில் நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழுவில் கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்தை செல்லாது என அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் தற்காலிக பொதுச்செயலாளராக தன்னை நியமித்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பு செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.மேலும் இதற்கு எதிர்ப்பு ஏற்பட்டால் அதனை சமாளிக்க ஓ. பன்னிர்செல்வத்திற்கு துணை பொதுச்செயலாளர் பதவியை அளிப்பது என்றும் எடப்பாடி தரப்பு திட்டமிட்டிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: