டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு சலுகைகள் 24 மணி நேரமும் அனுமதி, கட்டணம் ரத்து

புதுடெல்லி: ரூபாய் நோட்டு கொடுத்து பரிவர்த்தனை செய்வதை வெகுவாக குறைக்கவும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக, நந்தன் நீலகேனி தலைமையில் ரிசர்வ் வங்கி ஒரு உயர் கமிட்டியை அமைத்தது. இந்த கமிட்டி சமீபத்தில் தன்  அறிக்கையை தாக்கல் செய்தது. இதில் பல பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. பரிந்துரைகள் வருமாறு:

* ஆர்டிஜிஎஸ் மற்றும் என்இஎப்டி மின்னணு வசதிகளை 24 மணி நேரமும் அனுமதிக்க வேண்டும்.

* இதற்கான கட்டணத்தை அடியோடு ரத்து செய்ய வேண்டும்.

* டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும் போது ஏற்படும் சில கோளாறுகளை சரி செய்ய உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

* அரசு அமைப்புகளுக்கு பொதுமக்கள் செலுத்தும் அனைத்து கட்டணங்கள், வரி போன்ற விஷயங்களுக்கு எந்த வித கட்டணமும் இல்லாமல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை அனுமதிக்க வேண்டும்.

* பணம் செலுத்தும் போது ஏதாவது கோளாறு ஏற்படும் போது, அதற்காக வங்கிக்கு அலைய விடக்கூடாது; டிஜிட்டல் முறையில் சரி செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும்.

* வர்த்தக நிறுவனங்கள், கடைகளில் வைக்கப்படும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மிஷின்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் போது வரியை ரத்து செய்ய வேண்டும்.

* டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும் போது வங்கிகள் எந்த கட்டுப்பாடும் விதிக்க கூடாது.

* வாடிக்கையாளர்களுக்கு முழு சுதந்திரம் அளித்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்ய உதவ வேண்டும்.

* இவ்வாறு கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. இது பற்றி அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்.

Related Stories: