ஏழைகள் சிகிச்சை திட்டம் பெயர் மாற்றம் ஆஷா ஊழியர்கள் சம்பளம் ரூ10 ஆயிரமாக உயர்ந்தது: ஆந்திர முதல்வர் ஜெகன் உத்தரவு

திருமலை: ஆந்திராவில் ஆஷா ஊழியர்கள் சம்பளம் ரூ10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று தடேப்பல்லியில் உள்ள தனது இல்லத்தில் மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் பேசியதாவது:

அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைக்கு இணையாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம். மருத்துவத் துறையில் மாற்றங்கள் செய்வதற்காக முதல்வரின் துணைச் செயலாளர் ரமேஷ் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட உள்ளது. இந்த கமிட்டி, 45 நாட்களில் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். ஊழல், முறைகேடுகளுக்கு இடமளிக்காமல் அதிகாரிகள் பணிபுரிய வேண்டும்.

எனது தந்தை ராஜசேகர ரெட்டிஇருந்தபோது தொடங்கப்பட்ட ஆரோக்கியஸ்ரீ, 108 ஆம்புலன்ஸ் திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக திகழ்ந்தன. இந்த சேவைகளை மேலும் சிறப்பாக செய்யப்படுத்த வேண்டும். என்டிஆர் ஆரோக்கியஸ்ரீ திட்டத்தை ஒய்எஸ்ஆர் ஆரோக்கிய ஸ்ரீ திட்டமாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும். ஆஷா ஊழியர்கள் சம்பளத்தை ரூ10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. போலி மருந்து, தரமில்லாத பொருள்கள் விற்பனையின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: