எண்ணூரில் கடந்த 5 ஆண்டுகளாக அனல்மின் நிலைய பணிகள் முடக்கம்: தமிழகத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகார்

சென்னை: சென்னையை அடுத்த எண்ணுரில் புதிய அனல்மின் நிலைய பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் தமிழகத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எண்ணுரில் இயங்கி வந்த பழைய அனல்மின் நிலையம் மூடப்பட்டதையடுத்து புதிய அனல்மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. கடந்த ஆண்டே மின் உற்பத்தியை தொடங்க வேண்டிய இந்த அனல்மின் நிலையத்தில் பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. மேலும் மின்வாரியத்தின் இத்தகைய நிர்வாக சீர்கேடுகளால் தமிழகத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எண்ணூர் புதிய அனல்மின் நிலையத்திற்காக 2014ல் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 3,922 கோடி ரூபாயில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. பின்னர் இந்த நிறுவனம் தகுதி நீக்கப்பட்டதை அடுத்து மற்றொரு தனியார் நிறுவனமான பிஜிஆர் நிறுவனத்துக்கு 7,100 கோடி ரூபாயில் மறு ஒப்பத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தால் 3,100 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக புகார் எழுந்ததையடுத்து 5 ஆண்டுகளாக பணிகள் கிடப்பில் போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: