சென்னை: பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் இன்று முதல் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக, ஜூன் மாதம் சிறப்பு துணைத் தேர்வு நடக்க உள்ளது. இந்த துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தட்கல் முறையின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களும் இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித்தேர்வர்களாக விண்ணப்பித்த மாணவர்கள் மேற்கண்ட இணைய தளத்தில் நுழைந்து ஹால்டிக்கெட் என்ற வாசகத்தை கிளிக் செய்து தங்கள் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பழைய நடைமுறையின் கீழ் (மொத்த மதிப்பெண்கள் 1200) தேர்வு எழுதும் மாணவர்கள் பழைய முறை என்ற வாசகத்தை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.