மோடி வென்றதன் மூலம் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது; பாஜக தொண்டர்கள் மத்தியில் அமித் ஷா உரை

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளதால் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி தேர்வாகிறார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி, அக்கட்சியின் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் வருகை தந்தனர். அப்போது அவர்களுக்கு மலர்களை தூவி பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பேசிய அமித் ஷா, வரலாற்று வெற்றியை தேடி தந்த 130 கோடி மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அமித் ஷா தெரிவித்தார். இந்த வெற்றி கோடிக்கணக்கான தொண்டர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்றும், பிரமாண்ட வெற்றி பெற்றுள்ள மோடியை வரவேற்பதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், மோடி வென்றதன் மூலம் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகால மோடியின் சிறப்பான ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார். 28 கோடி ஏழை குடும்பங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி உள்ளதற்கு கிடைத்த வெற்றி என்று அமித் ஷா தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். மேற்குவங்கத்தில் வன்முறை மற்றும் கள்ள ஓட்டுகளை தாண்டி கள்ள ஓட்டுகளை தாண்டி 18 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 17 மாநிலங்களில் 50 சதவீதத்திற்கு மேல் பாஜகவுக்கு வெற்றி கிடைத்துள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Related Stories: