கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷஹீன் -2 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷஹீன் -2 ஏவுகணையை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சோதனை செய்தது. அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் இந்த ஏவுகணை 1,500 கி.மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள இலக்கை குறி வைத்து தாக்க கூடிய வல்லமை படைத்தது. பாகிஸ்தானின் ISPR அமைப்பின் படி , ஷஹீன் -2 ஏவுகணை பாகிஸ்தானின் மூலோபாய அமைப்பை பாதிக்கப்பதற்கும்,நாட்டின் பாதுகாப்பிற்கும் உருவாக்கப்பட்டது. ஏற்கனவே, கடந்த 2008ம் ஆண்டு இந்த ஷஹீன்-2 ரக ஏவுகணையை ஏவி பாகிஸ்தான் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.அதே சமயத்தில் ஹதீப்- 6 என்ற ஏவுகணையையும் சோதனை செய்தது. அந்த இரு ஏவுகணைகளின் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்ததையொட்டி அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப், ஏவுகணை தயாரிப்பு குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.

Advertising
Advertising

இந்த ஏவுகணைகளை, பாகிஸ்தான் விஞ்ஞானிகள், ரகசிய இடம் ஒன்றில் சோதித்துப் பார்த்துள்ளனர். இதையடுத்து இன்று ஷஹீன் -2 ஏவுகணையை மீண்டும் சோதனை செய்தது. அரபிக் கடல் பகுதியில் இந்த ஏவுகணையை ஏவி சோதனை நடத்தியது. டைரக்டர் ஜெனரல் மூலோபாய திட்டமிடல் பிரிவு, தளபதி இராணுவ மூலோபாய படைகள் கட்டளை, NESCOM தலைவர், இராணுவ மூலோபாயப் படைகளின் மூத்த அதிகாரிகள், மூலோபாய அமைப்புகளின் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் ஆகியோர் முன்னிலையில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. ஷஹீன் -2 ஏவுகணையின் சோதனை ஓட்டம் வெற்றியை தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதேபோல அந்நாட்டு ஜெ.சி.எஸ்.சி அமைப்பின் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் பாகிஸ்தான் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Related Stories: