நாகையில் தொடர் மின்வெட்டால் நெல் சாகுபடி பாதிப்பு: மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

நாகை: நாகை மாவட்டம், சீர்காழி அருகே தொடர் மின்வெட்டால் கோடை நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். சீர்காழி தாலுக்கா, ராதாநல்லூர் ஊராட்சியில் 700 ஏக்கரில் கோடை சாகுபடியாக நெல் பயிரிடப்பட்டுள்ளது. நீர்நிலைகள் வறண்டு விட்ட நிலையில் நிலத்தடி நீரை நம்பியே இவர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் இறைத்து நெல் சாகுபடி செய்து வரும் நிலையில், தற்போது 2 முதல் 4 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகின்றது.

 இதனால் அனைத்து பகுதிக்கும் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சாகுபடிக்கான நாற்றுகள் தயாராக இருந்தும் தண்ணீர் இல்லாததால் பலர் நடவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இதனால் நாற்றுகள் முற்றி கருகி வருகின்றன. கோடை விவசாயத்தை காப்பாற்ற தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என ராதாநல்லூர் விவசாயிகளும்,கிராம மக்களும்  கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories: