நாடு முழுவதும் பாஜக 326 இடங்களில் முன்னிலை... காங்கிரஸ் 106, மற்றவை 92 இடங்களில் முன்னிலை

புதுடெல்லி: நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் பாஜக 326 இடங்களிலும், காங்கிரஸ் 106 இடங்களிலும், மற்றவை 92 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடந்தது. அதோடு, 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடந்தது.

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய 4 பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 19ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 326 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 106 இடங்களிலும், மற்றவை 92 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக 35 இடங்களிலும் அதிமுக 3 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

முன்னிலை விவரம்;

பாஜக 326

காங்கிரஸ் 106

மற்றவை 92

வேட்பாளர்கள் முன்னிலை விவரம்;

வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை

அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பின்னடைவு... அமேதியில் ஸ்மிருதி ராணி முன்னிலை

காந்திநகரில் பாஜக தலைவர் அமித் ஷா முன்னிலை

ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி முன்னிலை

கேரளா வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முன்னிலை

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முன்னிலை

தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் எச்.ராஜா, தமிழிசை சவுந்திரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் பின்னடைவு

மத்திய சென்னையில் தயாநிதி மாறன், வட சென்னையில் கலாநிதி வீராசாமி, தென் சென்னையில் தமிழச்சி தங்க பாண்டியன் முன்னிலை

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை

சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் முன்னிலை

புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை

Related Stories: