உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டு சென்றது கோஹ்லி தலைமையிலான இந்திய அணி

மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றது. 12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30 ம் தேதி தொடங்கி ஜூலை 14 ம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து, வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிச்சுற்றில் வென்று உலகக்கோப்பையில் விளையாட தகுதி பெற்றன.

Advertising
Advertising

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிபட்டியலில்முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இத்தொடரில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5 ம் தேதி தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. இந்நிலையில் விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியினர் மும்பையில் இருந்து விமானம் மூலம்  நள்ளிரவு இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றனர்.  

Related Stories: