தொட்டியம் அருகே 5 வயது மகளை அடித்து கொன்ற ஆசிரியை காதலனுடன் கைது

தொட்டியம்:தனிமையில் இருப்பதற்கு தடையாக உள்ளதாக கருதி தனது 5 வயது மகளை கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஆசிரியை அடித்து கொன்றுள்ளார். திண்டுக்கல்லை சேர்ந்தவர் பிரசன்னா (42). தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதி. இவரது மனைவி நித்யகமலா(32). திண்டுக்கல்லை சேர்ந்த இவர், எம்.எஸ்.சி. படித்துள்ளார். இவர்களுக்கு லத்திகா (5) என்ற மகள் இருந்தாள்.  கருத்து வேறுபாடு காரணமாக 3 வருடங்களுக்கு முன்பு தம்பதியர் பிரிந்தனர். விவாகரத்து வழக்கும் நிலுவையில் உள்ளது. மகளுடன் தனியாக வசித்த நித்யகமலா, தொட்டியத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அப்போது அவருக்கு திண்டுக்கல்லை சேர்ந்த முத்துப்பாண்டியன் (37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் மதுரையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார். திருமணமாகி மனைவி, குழந்ைதகள் உள்ளனர். இந்தநிலையில், சில தினங்களுக்கு முன்பு தொட்டியம் அருகே காட்டுப்புத்தூர் அங்காளம்மன் கோயிலுக்கு முத்துப்பாண்டி நித்யகமலாவையும், லத்திகாவையும் அழைத்துச் சென்றார். அப்பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து தங்கியுள்ளனர். வீட்டு உரிமையாளரிடம் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வேலை கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

Advertising
Advertising

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை லத்திகாயை படுகாயத்துடன் காட்டுப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு நித்யகமலா கொண்டு சென்றுள்ளார். பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பினர். ஆனால், வழியிலேேய லத்திகா இறந்தாள். இதனிடையே, காட்டுப்புத்தூர் போலீசார் சேலம் சென்று நித்யகமலாவிடம் விசாரித்ததில் லத்திகாயை அடித்து கொடுமைப்படுத்தியது தெரியவந்தது. மேலும், சேலம் மருத்துவமனையில் போலீசாரை கண்டதும் முத்துப்பாண்டி தப்பியோடி தலைமறைவானார். இதையடுத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி சேலம் டவுன் பஸ் நிலையத்தில் பதுங்கியிருந்த முத்துப்பாண்டியை  சுற்றிவளைத்தனர். இருவரையும் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சம்பவத்தன்று 2 பேரும் அரைகுறை ஆடையுடன் தனிமையில் இருப்பதை லத்திகா பார்த்திருக்கிறாள். உடனே, நித்யகமலாவிடம் சென்று, அம்மா என்னம்மா எப்பவும் இப்படியே இருக்கீங்க என கேட்டுள்ளாள். அதற்கு நித்யகமலாவோ, சிறுமியை அடித்து உதைத்து டி.வி.யை பாரு என்றுகூறி விரட்டி உள்ளார். வலிதாங்க முடியாத சிறுமியோ அழுதபடி இருந்துள்ளாள். இதனால், 2 பேரும் ஆத்திரமடைந்து லத்திகாயை வயரால் கடுமையாக அடித்து உள்ளனர். இதில், அவள் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, நித்யகமலாவின் முதல் கணவர் பிரசன்னாைவ திண்டுக்கல்லில் இருந்து வரவழைத்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த புகாரின்பேரில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: