மோசடி கணிப்புகளை புறந்தள்ளுவோம்; வாக்கு எண்ணிக்கையில் கவனம் வைப்போம்: டிடிவி தினகரன் அறிக்கை

சென்னை: மோசடி கணிப்புகளை  புறந்தள்ளி, வாக்கு எண்ணிக்கையில் கவனம் வைக்குமாறு அமமுக தொண்டர்களுக்கு டிடிவி.தினகரன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எவ்வளவோ அதிகார துஷ்பிரயோகங்களைச் செய்தும் வெற்றிக்கு வாய்ப்பில்லை என்பது புரிந்ததும், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு என்ற பெயரில் அடுத்த புரட்டை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் இந்த கருத்து கணிப்பை நம்ப மக்கள் தயாராக இல்லை என்றும், அமமுக தொண்டர்களும் இதை புறந்தள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். அமமுகவினர் மத்தியில் ஒருவித குழப்பத்தை, சலிப்பை ஏற்படுத்தி வாக்கு என்னும் மையங்களில் தங்களது அதிகார சித்து விளையாட்டுகளை ஆடலாமா என்ற நட்பாசை தான் இந்த கருத்து கணிப்புகளின் பின்னணி என்றும், வாக்கு எண்ணிக்கை நாளன்று இரு மடங்கு விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம் என்றும் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.  

Related Stories: