சென்னையில் டைவிங் பயிற்சி முகாம்

சென்னை: மாநில அளவிலான டைவிங் நீச்சல் வீரர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் சென்னையில் மே 29ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இந்த ஆண்டுக்கான டைவிங் அகாடமியில் சேருவதற்கான நீச்சல் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்யும் முகாம் மே 13ம் தேதி நடைப்பெற்றது. இதில் 8 முதல் 12 வயதுக்குட்பட்ட சுமார் 100 சிறுவர், சிறுமிகள் பங்கேற்றனர். அவர்களில் சிறப்பாக டைவிங் செய்த 48 பேர் தேர்வு  செய்யப்பட்டனர். அவர்களுக்கு டைவிங் அகாடமி மூலமாக மே 14ம் தேதி முதல் முதல் கட்ட பயிற்சி தொடங்கியது. பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள டைவிங் வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகள்  அகாடமி மூலம் செய்துக் கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு தேர்வு பெற்றவர்கள் மட்டுமின்றி கடந்த ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கும் இந்த பயிற்சி முகாம் மே 29ம்தேதி முடிகிறது.

Advertising
Advertising

Related Stories: