பிரதமர் மோடியை `டைம்’ பத்திரிகை சமீபத்தில், ‘பிரித்தாளும் தலைவர்’ என சித்தரித்து கட்டுரை வெளியிட்டது. இதற்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது பற்றி இக்கட்சியின் தேசிய அறிக்கை தயாரிப்பு துணைக் குழு உறுப்பினர் கருணா கோபால் கூறியதாவது: பிரதமர் மோடியை பிரித்தாளும் தலைவர் என திரித்து கூறி பிரசுரமான கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளோம். அவர் பிரிவினைவாதி அல்ல; ஒன்றுபடுத்துபவர், ஒருங்கிணைப்பாளர், நல்லிணக்கவாதி. அவரது ஆட்சியில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வடகிழக்கு மாநிலங்களின் விமானம், ரயில் போக்குவரத்து, தொலைத் தொடர்பு, சுற்றுலாத் துறைகள் மேம்பட்டுள்ளன.
