இங்கிலாந்து டி20 தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார் இம்ரான் தாஹீர்

லண்டன்: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான இம்ரான் தாஹீர் இங்கிலாந்து டி20 தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து டி20 தொடரில்  சர்ரே அணிக்காக விளையாடுகிறார். ஜீலை 19-ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ள டி20 தொடரில் முதல் போட்டியில் சர்ரே அணி இசெக்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த டி20 தொடர் முழுவதும் இம்ரான் தாஹீர் பங்கேற்க உள்ளார். இம்ரான் தாஹீர் சர்ரே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டதன் மூலம் அந்த அணி பவுலிங்கில் வலிமை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அணியில் ஆரோன் ஃபின்ச்-ற்கு பிறகு இரண்டாவது வெளிநாட்டு வீரராக இணைந்துள்ளார்.

Advertising
Advertising

மே 30 அன்று இங்கிலாந்தில் தொடங்க உள்ள ஐசிசி உலக கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியில் இம்ரான் தாஹீர் இடம்பெற்றுள்ளார். இதுவே இவரது கடைசி சர்வதேச 50 ஓவர் கிரிக்கெட் தொடராகும். உலகக் கோப்பை தொடர் முடிந்த பிறகு இம்ரான் தாஹீர் சர்ரே அணியில் இணைய உள்ளார். அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய தாஹீர் சிறப்பாக பந்து வீசி அதிக விக்கெட்டுகளை எடுத்தார். 17 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி 2019 ஐபிஎல் தொடரின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

Related Stories: