வாஷிங்டன்: அடுத்த மாதம் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.ஜப்பானில் வரும் ஜூன் மாதம் ‘ஜி 20’ நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த அமைப்பில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதனால் ஜூன் மாதம் நடக்கும் உச்சி மாநாட்டில், அதன் தலைவர்கள் கலந்துக் கொள்கின்றனர்.அமெரிக்க அதிபர் டிரம்பும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘‘மாநாட்டுக்கு இடையே, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கையு சந்திக்க திட்டமிட்டுள்ளேன்’’ என்று கூறியுள்ளார்.