வாஷிங்டன் : 2020-ம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன் அமெரிக்காவுடன் சீனா வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்றால் விளைவுகள் மோசமாகும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக போருக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இருதரப்பு பிரதிநிதிகள் உயர்மட்ட அதிகாரிகள், நீதி அமைச்சர்கள் இடையே நடைபெற்ற பலக்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.