பிஎஸ்எப் முன்னாள் வீரர் பகதூர் வழக்கு டிஸ்மிஸ்

புதுடெல்லி: இந்திய எல்லை பாதுகாப்பு படையில் (பிஎஸ்எப்) பணியாற்றியவர் தேஜ் பகதூர். இவர் ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவத்தினருக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார். இதனால் 2017ம் ஆண்டு பணியில் இருந்து இவர் நீக்கப்பட்டார். இந்நிலையில், பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில்  சமாஜ்வாடி சார்பில் ேபாட்டியிட்ட அவரது மனுவை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து தேஜ் பகதூர் தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதுதரப்பு வாதங்களைதொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தேஜ் பகதூர் தாககல் செய்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Stories: