பிரான்ஸில் போதிய மாணவர்கள் இல்லாததால் பள்ளி மூடல்: பெற்றோர்கள் நூதன போராட்டம்

பிரான்ஸ்: பிரான்ஸில் போதிய மாணவர்கள் இல்லாததால் பள்ளி ஒன்று மூடப்படுவதை தடுப்பதற்காக 15 ஆடுகளை பள்ளியில் சேர்த்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆல்ப்ஸ் மாகாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில் இயங்கி வரும் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டால் அப்பள்ளி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மூடப்படுவதை தடுக்க நினைத்த மாணவர்களின் பெற்றோர் 15 ஆடுகளை பள்ளியில் சேர்த்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாணவர்களின் நலனை விட எண்ணிக்கையில் கவனம் செலுத்தும் பிரான்ஸ் கல்வி ஆணையத்துக்கு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர் கண்டனம் தெரிவித்தனர்.

Related Stories: