அரசின் ரகசியங்களை கசியவிட்டதாக கைது செய்யப்பட்ட ராய்ட்டர்ஸ் நிருபர்களை விடுவித்தது மியான்மர் அரசு

யங்கூன்: மியான்மர் சிறையில் இருந்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் நிருபர்களான வா லோன், கியாவ் ஓ ஆகியோரை மியான்மர் அரசு விடுதலை செய்தது. மியான்மரில் 10 ரோஹிங்கயா முஸ்லீம்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி செய்தி வெளியிட்ட வா லோன், கியாவ் ஓ என்ற 2 ராய்ட்டர்ஸ் நிருபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அரசின் ரகசிய ஆவணங்களை திருடியதாக கூறி அவர்களுக்கு கடந்தாண்டு மியான்மரின் யங்கூன் மாவட்ட நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. செய்தியாளர்கள் கைதுக்கு ஐநா அமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தது.

ராய்ட்டர்ஸ் நிருபர்கள் இருவரும் 500 நாட்களுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில், நல்லெண்ண அடிப்படையில் அவர்கள் இருவரையும் மியான்மர் அரசு விடுவித்துள்ளது.  நிருபர்கள் இருவருக்கும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளித்து விடுதலை உத்தரவில் கையெழுத்திட்டதாக அங்குள்ள ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.  மியான்மரின் பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டம் ஏப்ரல் 17 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவிப்பது அந்நாட்டில் வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில் ஆயிரக்கணக்கான கைதிகள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: