ஆம்பூர் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதி 7 பேர் நசுங்கி பலி: சுற்றுலா வந்த இடத்தில் சோகம்

ஆம்பூர்:  ஆம்பூர் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதி, மகாராஷ்டிராவை சேர்ந்த ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் உட்பட 7 பேர்  உடல் நசுங்கி பலியாகினர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு பொக்லைன் ஏற்றி சென்ற  லாரி, அங்கு பொக்லைனை இறக்கிவிட்டு நேற்று காலை திரும்பி வந்தது. வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ஜமீன் அருகே நேற்று  பிற்பகல் 2 மணியளவில் வெயில் காரணமாக சாலையோரத்தில் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நின்றிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கி லாரியின் அடியில் சுமார் நான்கடி உள்ளே சென்று சிக்கியது. இந்த கோர  விபத்தில் காரில் பயணம் செய்த அனைவருமே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.

தகவலறிந்து ஆம்பூர் தாலுகா போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் வந்து லாரியின் அடியில் சிக்கிய காரை கிரேன் உதவியால் அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். காரின் பின் சீட்டில் இருந்த 2 ஆண்களை போலீசார்  சடலமாக மீட்டனர். ஒருவரது சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து போலீசார் விவரங்களை சேகரித்தனர். இதில் காரில் வந்தவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புல்சாவல் ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் தேஷ்முக் என்றும் மகாராஷ்டிரா மாநில அமைச்சரின் உதவியாளரது சகோதரர்  என்றும் தெரியவந்தது. சுமார் 2 மணி நேரம்  போராடி கடப்பாரையால் காரின் கதவுகளை உடைத்து 4 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் என 7 பேரின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இவர்கள் அனைவரும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கோடை விடுமுறை சுற்றுலாவுக்காக பெங்களூரு வந்ததும், அங்கிருந்து வேலூருக்கு சுற்றுலா வந்து திரும்பியபோது விபத்தில் சிக்கியதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: