ஒகேனக்கல் வனப்பகுதியில் முனுசாமி என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் ஒருவர் கைது

ஒகேனக்கல்: ஒகேனக்கல் வனப்பகுதியில் முனுசாமி என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 1-ம் தேதி பண்ணப்பட்டி வனப்பகுதியில் உறவுக்கார பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த முனுசாமி நாட்டுத்துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் பென்னாகரம் அருகே சிகரஅள்ளி என்ற இடத்தில் பதுங்கியிருந்த ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: