பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் திப்பு சுல்தானுக்கு புகழாரம்

இஸ்லாமாபாத்: திப்பு சுல்தானின் நினைவு தினத்தையொட்டி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவரை புகழ்ந்துள்ளார். மைசூரின் புலி என்று அழைக்கப்படும் திப்பு சுல்தான் தனது  ஆட்சிக்காலத்தில் பல்வேறு புதுமைகளை புகுத்தியவர்.  திப்பு உருவம் பொறித்த நாணயங்கள் மற்றும் புதிய நில வருவாய்  முறைகளை இவர் தனது ஆட்சிக்காலத்தில் அறிமுகம் செய்தார். இவை மைசூரில் பட்டு தொழில் வளர்ச்சி அடைவதற்கு காரணமாக இருந்தது. போரின்போது ராக்கெட் தாக்குல்களை நடத்திய திப்பு சுல்தானின் போர் யுக்திகள் வரலாற்றில் இன்றும் பேசப்படுகிறது.

ஆடுகளை போல ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதை காட்டிலும் புலியை போல ஒரே நாள் வாழ்வது சிறந்தது என்று  முழங்கியவர். கடந்த 1799ம் ஆண்டு மே 4ம் தேதி நடந்த ஆங்கிலேயருக்கு எதிரான போரில் முன்னின்று போராடி தனது உயிரை நாட்டிற்காக தியாகம் செய்தார் திப்பு சுல்தான். இவரது நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதை யொட்டி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டிவிட்டர் பதிவில், “மே 4 திப்பு சுல்தானின் நினைவு தினம். நான் அவரை பாராட்டுகிறேன்.

திப்பு சுல்தான் அடிமைத்தன வாழ்க்கையை விட விடுதலையை விரும்பினார். அதற்காக போரிட்டு இறந்தார்” என்று கூறியுள்ளார். பிரதமர் இம்ரான் கான் ஏற்கனவே திப்பு சுல்தானை புகழ்ந்து கூறியுள்ளார். கடந்த மார்ச்சில் புல்வாமா தாக்குதல் எதிரொலியாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வந்தது. அப்போதும் இம்ரான் கான் “நாம் இரு அரசர்களை பற்றி கேள்வி பட்டு இருக்கிறோம், ஆனால் திப்பு சுல்தானே நமது ஹீரோ என்று கூறியிருந்தது” குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: