பாஜ தலைவர்களின் பேச்சால் மட்டமான அரசியல் நிலைமை உருவாகிறது : சச்சின் பைலட் கருத்து

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் 13 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 29ம் தேதி தேர்தல் முடிந்தது. மீதமுள்ள 12 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், இம்மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான சச்சின் பைலட் நேற்று அளித்த பேட்டி: தேர்தல் பிரசாரம் என்பது அரசு நிர்வாகம், முதலீடு உள்ளிட்டவை பற்றியதாக இருக்க வேண்டும். காங்கிரசின் பிரசாரத்தில் அவையே முன்னெடுத்து வைக்கப்படுகின்றன. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு என்ன செய்தோம் என்பதை எடுத்து கூறுவதில் பாஜ தோல்வி அடைந்துள்ளது.

இத்தேர்தலின் முக்கிய கோஷமான வேலைவாய்ப்பு, விவசாயிகள் பிரச்னை குறித்து எந்தவொரு பாஜ தலைவர்களும் வாயே திறக்கவில்லை. பிரசாரத்தில் அவர்கள் பேசிய விதத்தை பார்த்தால், புதிய மட்டமான அரசியல் உருவாகி வருவதாக தெரிகிறது. அரசு உயர் பதவிகளில் இருப்பவர்கள் எதிர்கால தலைமுறையினருக்கு மிக மோசமான முன்னுதாரணமாக நடந்து கொள்கின்றனர். இம்முறை ராஜஸ்தானில் காங்கிரசுக்கு ஆதரவு  அலை வீசுகிறது. அதனால், 25 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: