கெஜ்ரிவாலுக்கு எதிராக தமிழக மாணவர்கள் மனு

புதுடெல்லி :  அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக தமிழக மாணவர் அமைப்பு தரப்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வரும் 12ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள மாணவர்களுக்கு கல்லூரிகளில் சீட் கிடைக்காமல் இருப்பதற்கு காரணம் தமிழக மாணவர்கள் தான் என்று டெல்லி  முதல்வர் கெஜ்ரிவால் பேசிய ஆடியோ சர்ச்சையை கிளப்பி உள்ளது. டெல்லியில் உள்ள தமிழக மாணவர் அமைப்பினர் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அதில்,” தமிழக மாணவர்களுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய ஆடியோவை உடனடியாக தலைமை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். புகார் மனுவை பெற்றுக்கொண்ட ஆணைய அதிகாரிகள் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் நேற்று உறுதி அளித்துள்ளனர்.

தமிழக விவசாயிகள் மனு:  இதேப்போல் தமிழக விவசாயிகளும் தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று மனு கொடுத்துள்ளனர். அதில்,” பிரதமருக்கு எதிராக வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட தமிழக மற்றும் தெலுங்கானா விவசாயிகள் ஒன்றிணைந்து 100க்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் முயன்றோம். ஆனால் அது பிரதமரின் இமேஜை பாதிக்கும் என்பதால் அதிகாரிகள் போலீசாரின் துணையுடன் எங்களை விரட்டி அடித்தனர். இதனால், வாரணாசி தொகுதியி தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். மனுவை பரிசீலனை செய்வதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: