சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசாரின் சொத்துகளை முடக்க பாகிஸ்தான் உத்தரவு: வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை

இஸ்லாமாபாத்:  சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள மசூத் அசாரின் சொத்துகளை முடக்குவதற்கும், அவர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்து பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார். இவன், மும்பை குண்டுவெடிப்பு மற்றும் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன். மசூத்தை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க கோரி, ஐநா.வில் இந்தியா தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த சீனா, தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதை முறியடித்து வந்தது. இதையடுத்து, மசூத்தை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதற்காக தீர்மானத்தை பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வல்லரசு நாடுகள் நேரடியாக கொண்டு வந்தன.

இதையடுத்து, நேற்று முன்தினம் சர்வதேச தீவிரவாதியாக மசூத் அறிவிக்கப்பட்டான் இந்நிலையில், பாகிஸ்தானில் மசூத் அசாருக்கு உள்ள சொத்துகளை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதன்படி, பாகிஸ்தானில் மசூத் அசாருக்கு சொந்தமாக உள்ள சொத்துகள் அனைத்தும் முடக்கப்படுகின்றன. அதேபோல், வெளிநாடுகளில் உள்ள சொத்துகளும் முடக்கப்படுகின்றன. மேலும், அவன் வெளிநாடு செல்வதற்கும் பயண தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: